வாட்ஸ் அப் வாய்ஸ் அழைப்பில் பேசுபவரா? மொபைல் டேட்டா பயன்பாட்டை கட்டுப்படுத்துவது எப்படி?
வாட்ஸ் அப்-ஐ பெரும்பாலான மக்கள் மெசேஜ் அனுப்புவதற்காகத் தான் பயன்படுத்துகின்றனர் என்றாலும், இன்னும் சிலர் வாய்ஸ் அழைப்பு மற்றும் வீடியோ அழைப்பு பேசுவதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
வாட்ஸ் அப் வாய்ஸ் அழைப்புகளை ஒரு நிமிடம் பயன்படுத்தினால் 720 கேபி டேட்டா செலவாகிறது என்பது தெரியுமா?
இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல என தோன்றினாலும், மிக அதிகமான நேரத்திற்கு நீங்கள் வாய்ஸ் கால் பேச நேரிடும் போது, அன்றாடம் உங்களுக்கு வழங்கப்படும் டேட்டா லிமிட்டில் பெரும்பகுதி டேட்டா இதற்கு செலவாகி விடும்.
இது போன்ற சமயங்களில் மொபைல் டேட்டா பயன்பாட்டை கட்டுப்படுத்துவது எப்படி?
உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் வாட்ஸ் அப் செயலியை ஓப்பன் செய்யுங்கள்.
ஸ்கிரீனுடைய வலது மேற்பக்க மூலையில் உள்ள 3 புள்ளிகள் மீது கிளிக் செய்யவும்.
அதில் உள்ள மெனுவில் செட்டிங்க்ஸ் மீது டேப் செய்யவும். ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா என்ற தேர்வின் மீது கிளிக் செய்யவும்.
இப்போது யூஸ் லெஸ் டேட்டா ஃபார் கால்ஸ் என்று டாகிள் செய்யவும்.