இலங்கையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்றது அவுஸ்திரேலியா
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மேலும், இந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது.
முன்னதாக 2011-ல் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது. இதன் பிறகு, 2 தொடர்கள் விளையாடப்பட்டன, ஒன்று இலங்கை வென்றது, மற்றொன்று டிராஆனது.
இந்த இரு அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் 12-ம் திகதி கொழும்புவில் நடக்கிறது.
காலியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 257 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 414 ஓட்டங்கள் குவித்தது. இதனால் அந்த அணி 157 ஓட்டங்கள் கூடுதலாக எடுத்தது.
இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி பெரிய அளவில் ஓட்டங்கள் எடுக்க முடியாமல் 231 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதையடுத்து 75 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |