நடுக்கடலில் தத்தளித்த புலம்பெயர்ந்தோர் படகு: 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Gambian Migrant Boat Adrift 80 dead: கேனரி தீவுகளை நோக்கி சென்ற கப்பல் நடுக்கடலில் தத்தளித்த நிலையில் அதிலிருந்த 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
80 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு
காம்பியாவில்(Gambia) இருந்து சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு கேனரி தீவுகளை நோக்கி புறப்பட்ட படகு நடுவழியில் விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 80 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
கடல்சார் மீட்பு படையினர் ரோந்து விமானம் மூலம் கிரான் கேனரி தீவிற்கு தெற்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் மரத்தினால் ஆன படகு ஒன்று நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து Guardamar Urania என்ற மீட்புக் கப்பல் வியாழக்கிழமை அப்பகுதியை சென்றடைந்த போது, அந்த படகில் 45 உயிர் பிழைத்தவர்களும், 5 உடல்களும் மட்டுமே இருந்தன.
கடல் கொந்தளிப்பு மற்றும் மீட்பு படையினருக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததை அடுத்து படகில் இருந்த எஞ்சிய சடலங்களை மீட்கும் பணி தடைபட்டுள்ளது.
செப்டம்பர் 7ம் திகதி காம்பியாவில் இருந்து புறப்பட்ட கப்பலுடன் இந்த கப்பல் ஒத்து போவதாக ஸ்பெயின் நாட்டின் சிவில் கார்டு மற்றும் கமினாண்டோ ஃபிரோன்டெராஸ் ஆகிய தொண்டு நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த படகு புறப்படும் போது கிட்டத்தட்ட 4 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 128 பேருடன் புறப்பட்டுள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, இதில் உயிர் பிழைத்தவர்கள் அனைவரும் காம்பியா மற்றும் மாலி நாட்டை சேர்ந்த வயது வந்த ஆண்கள் என தெரியவந்துள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |