தாயை கொன்றுவிட்டு பாட்டுக்கேட்டபடி புகைபிடித்த 14 வயது சிறுவன்! விசாரணையின்போது சிரித்துக்கொண்டே பதிலளித்ததால் அதிர்ச்சி
கஞ்சா போதைக்கு அடிமையான சிறுவன் கண்டித்த தாயை கொலை செய்த கொடூரம்
கொலை செய்துவிட்டு சாதித்தது போல் புகைபிடித்தபடி நடந்து சென்ற 14 வயது சிறுவன்
தமிழக மாவட்டம் ஈரோட்டில் பெற்ற தாயை கல்லைப் போட்டு கொன்ற சிறுவன் போதைக்கு அடிமையானதாக தெரிய வந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சுங்கக்காரன் பாளையத்தைச் சேர்ந்த யுவராணி என்ற பெண், அவரது 14 வயது மகன் சஞ்சயால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சரிவர படிக்காததால் விடுதியில் சேர்க்கப்பட்ட சிறுவன் சஞ்சய், தேர்வு விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், ஒன்லைன் கேம் மற்றும் கஞ்சா போதைக்கு சஞ்சய் அடிமையானதை தாய் யுவராணி கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், இரவு தாய் தூங்கும்போது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். அதன் பின்னர் வீட்டில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் சஞ்சய் செல்போனில் பாடல் கேட்டபடி சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அத்துடன் புகைபிடித்தபடி அவர் சென்றதை பார்த்த பொலிஸார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது எந்த பதற்றமும் இல்லாமல் சிரித்துக் கொண்டே சிறுவன் பேசியதைப் பார்த்த பொலிஸார் மிரண்டு போயினர்.
சிறுவன் போதையின் உச்சத்தில் இருந்ததால், போதை தெளிந்தவுடன் அவனிடம் விசாரணை நடத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
[