அமெரிக்காவில் இந்து கோவில் வாசலில் காந்தி சிலை உடைப்பு; 15 நாட்களில் இரண்டாவது தாக்குதல்
நியூயார்க் நகரத்தில் இந்து கோவில் வாசலில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது.
நியூயார்க் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க, குயின்ஸில் உள்ள இந்து கோவிலுக்கு வெளியே இருந்த மகாத்மா காந்தியின் சிலை, கடந்த 15 நாட்களில் இரண்டாவது முறையாக மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உடைத்து நொறுக்கப்பட்டது.
தெற்கு ரிச்மண்ட் ஹில்லில் உள்ள ஸ்ரீ துளசி மந்திருக்கு வெளியே உள்ள கண்காணிப்பு வீடியோவில், செவ்வாய்க்கிழமை இரவு மகாத்மா காந்தியின் சிலையை ஒருவர் தான் வைத்திருந்த சுத்தியலால் அடித்து உடைத்தது பதிவாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மற்றோரு 6 பேர் சேர்ந்த கும்பலில் ஒருவர் சிலையை தரையில் கவிழ்த்தார். மற்றவர்கள் அதன் மீது மிதித்து, உடைந்த சிலையையும் மாறி மாறி அடித்து உடைத்தனர்.
மேலும் ஆபாசமாக வண்ணம் தீட்டியுள்ளார். கோவிலுக்கு முன்னும் பின்னும் "Dog" என்ற வார்த்தை வர்ணம் பூசப்பட்டது. இந்த சம்பவம் செவ்வாய்கிழமை நள்ளிரவு 1:30 மணியளவில் நடந்துள்ளது.
#NYC
— The Daily Sneed™ (@Tr00peRR) August 19, 2022
Six men sledge hammered and spray painted a beloved Gandhi statue outside a Hindu temple in #Queens
This is the second attack in less than two weeks, police and temple officials said Thursday. pic.twitter.com/cjhfWIgWIO
அதே சிலை இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, ஆகஸ்ட் 3, 2022 அன்று சேதப்படுத்தப்பட்டது.
துளசி மந்திரில் உள்ள காந்தி சிலை இரண்டாவது முறையாக சேதப்படுத்தப்பட்டது, இந்த முறை முற்றிலும் அழிக்கப்பட்டது.
நியூயார்க் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார் இந்த சம்பவத்தை கண்டித்தும், "இந்து எதிர்ப்பு வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கு" அமைதியான வழிகளில் செயல்படுவதாகவும் ட்வீட் செய்துள்ளார்.
மேலும், "குற்றவாளிகள் விரைவாகக் கைது செய்யப்பட வேண்டும், குற்றஞ்சாட்டப்பட்டு சட்டத்தின் முழு அளவிற்கு வழக்குத் தொடரப்பட வேண்டும்" என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
சிபிஎஸ் செய்தி அறிக்கையின்படி, கடந்த ஆண்டை விட நியூயார்க் நகரில் வெறுப்பு குற்றங்கள் 15.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
US: Gandhi statue, placed at Tulsi Madir, Queens NY smashed, vandalised and damaged by unknowns.https://t.co/2ZgkuM2oUP pic.twitter.com/EU7TpdgFSs
— মমতা পিসির তোলাবাজ ভাইপো (@prabhu_06_11) August 19, 2022
The Gandhi statue at Tulsi Mandir was vandalized a second time, this time completely destroyed.
— Jenifer Rajkumar (@JeniferRajkumar) August 18, 2022
With the outpouring of support I’ve received from ppl all around Queens, the country & world, I’m more optimistic than ever that we will succeed in defeating these forces of hate.? pic.twitter.com/TolUqi0wCR