கனடாவில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தி அவமதிப்பு
கனடாவில் காந்திஜியின் சிலை சேதப்படுத்தி அவமதிப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் மகாத்மா காந்தியின் சிலை அவமதிப்பு
கனடாவின் பர்னபியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு வாரத்தில் கனடாவில் காந்தி சிலை மீது நடத்தப்பட்ட 2-வது தாக்குதலாகும்.
சில நாட்களுக்கு முன், ஒன்ராறியோவில் தேசத் தந்தையின் மற்றொரு சிலை மர்ம நபர்களால் தாக்கப்பட்டது.
சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தின் பர்னபி வளாகத்தில் உள்ள அமைதி சதுக்கத்தில் சமீபத்தில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது.
இது குறித்து தூதரக ஜெனரல் ட்விட்டரில், "அமைதியின் முன்னோடியாக விளங்கும் மகாத்மா காந்திஜி அவமதித்த, கொடூரமான குற்றத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்" என்று பதிவு செய்துள்ளார்.
கடந்த மார்ச் 23-ம் திகதி அன்று ஒன்ராறியோவில் உள்ள ஹாமில்டன் நகரில் சிட்டி ஹால் அருகே இருந்த மகாத்மா காந்தியின் சிலையை இந்திய எதிர்ப்பாளர்கள் சிதைத்து வர்ணம் பூசினர்.
கனடாவில் சமீபத்தில், இந்து கோவில்கள் மீது காலிஸ்தானி ஆதரவாளர்கள் தாக்குதல்கள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.