27 வருடங்களுக்கு முன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கு இப்போது வழக்கு தொடர்ந்த பெண்! மகன் கேட்ட ஒற்றை கேள்விக்காக.!
தனது தந்தை யார்? என்று மகன் கேட்ட ஒற்றை கேள்விக்கு பதில் கிடைக்க, 27 வருடங்களுக்கு முன் கற்பழிக்கப்பட்ட தாய் இப்போது வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான உத்திர பிரதேசத்தில் ஷாஜகான்பூரில் 27 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு ஆண்கள் மீது ஒரு பெண் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது 40 வயது ஆகும் நிலையில், அவரது மகன் தனது தந்தையைப் பற்றி விசாரித்ததன் காரணமாக, வெளிப்படையாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
எஃப்.ஐ.ஆரின் படி, 1994-ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு 13 வயது. அவர் ஷாஜகான்பூர் நகரில் உறவினர் வீட்டில் வசித்து வந்தபொது இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதே பகுதியில் வசித்த Naki Hasan என்பவர், அப்பெண் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தொடர்ந்து, Hasan-ன் தம்பி Guddu-வும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நாட்களில் அப்பெண் கருவுற்றதை அடுத்தே உறவினர்கள் நடந்த சம்பவம் குறித்து தெரிந்து கொண்டனர். பெண்ணின் உடல்நிலை மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டு, அப்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் இது குறித்து வழக்கு தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.
அதற்கு பதிலாக, அவர் பிரசவித்த பிறகு, குழந்தையை வேறொருவரிடம் தத்துக்கொடுத்துள்ளனர். பல வருடங்கள் கழித்து, தாயும் மகனும் ஒன்றிணைந்த நிலையில், மகன் தனது தந்தையைப் பற்றி கேட்டுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த தாய் தனது மகனின் வற்புறுத்தலின் பேரில் வழக்கைத் தொடர முடிவு செய்துள்ளார்.
புகாரில், Naki Hasan மற்றும் அவரது சகோதரர் Guddu ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும், தந்தைவழி கண்டறிய டி.என்.ஏ சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அந்த பெண் கோரியுள்ளார்.