கருணைக்கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் கடைசி ஆசை

Spain
By Balamanuvelan Mar 27, 2026 05:45 AM GMT
Report

ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணொருவர் கருணைக்கொலை செய்யப்பட ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றமும் ஸ்பெயின் அரசியல் சாசன நீதிமன்றமும் அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து, நேற்றிரவு அவர் கருணைக்கொலை செய்யப்பட்டார்.

கருணைக்கொலை செய்யப்பட்ட இளம்பெண்

ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவைச் சேர்ந்தவர் ராமோஸ் (Noelia Castillo Ramos, 25) என்னும் இளம்பெண்.

கருணைக்கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் கடைசி ஆசை | Gang Rape Victims Heartbreaking FinalTik Tok

அரசு காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த ராமோஸ், 2022ஆம் ஆண்டு கூட்டு வன்கொடுமைக்கு ஆளானார்.

தனக்கு நேர்ந்த பயங்கரம் குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த ராமோஸ், தன் பெற்றோர்கள் தன்னைக் கவனித்துக்கொள்ளாததால், 13 வயதில், தான் அரசு காப்பகம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

காப்பகத்திலிருக்கும்போது, தான் பலமுறை வன்புணரப்பட்டதாக தெரிவித்த ராமோஸ், கடைசியாக, தான் தனது பதின்மவயதுகளிலிருக்கும்போது, மூன்று பேர் தன்னை கொடூரமாக கூட்டு வன்புணர்வு செய்ததாக தெரிவித்துள்ளார்.

அதனால் கடும் மன பாதிப்புக்குள்ளான அவர் தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக கட்டிடம் ஒன்றிலிருந்து குதிக்க, அவர் உயிர் பிழைத்துவிட்டார், ஆனால், அவரது உடல், இடுப்புக்குக் கீழே செயலிழந்துவிட்டது.

பல ஆண்டுகளாக கடும் மனவேதனையும் உடல் வேதனையும் அனுபவித்துவந்த ராமோஸ், கருணைக்கொலை செய்யப்பட அனுமதி கோரினார். 

2024ஆம் ஆண்டு அவர் கருணைக்கொலை செய்யப்பட இருந்த நிலையில், ராமோஸின் தந்தை தன் மகள் தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கெதிராக வழக்குத் தொடர, ராமோஸின் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.

கருணைக்கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் கடைசி ஆசை | Gang Rape Victims Heartbreaking FinalTik Tok

இந்நிலையில், ராமோஸின் கோரிக்கையை ஏற்று அவர் கருணைக்கொலை செய்யப்பட ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றமும் ஸ்பெயின் அரசியல் சாசன நீதிமன்றமும் அனுமதியளித்தன.

அதைத் தொடர்ந்து, நேற்றிரவு ராமோஸ் கருணைக்கொலை செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

கடைசி ஆசை

கடைசியாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராமோஸ், என் குடும்பத்தில் யாருமே எனது கருணைக்கொலைக்கு ஆதரவாக இல்லை. காரணம், நான் என் குடும்பத்தின் தூண்களில் ஒன்றாக உள்ளதுதான். ஆனாலும், நான் போகிறேன், நீங்கள் வேதனையுடன் வாழப்போகிறீர்கள்.

ஆனால் யோசித்துப்பாருங்கள், நான் இத்தனை வருடங்களாக அனுபவித்த வேதனையை எண்ணும்போது, நான் என் பாடுகள் நீங்க அமைதியாக கடந்துபோகவே விரும்புகிறேன், அவ்வளவுதான் என்று கூறியிருந்தார். 

ஆக, தனது கடைசி ஆசையிலும், தான் மரணமடையும்போது, தன் தந்தை தன்னுடன் இருக்கக்கூடாது என்று கோரியிருந்தார் ராமோஸ்.

கருணைக்கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் கடைசி ஆசை | Gang Rape Victims Heartbreaking FinalTik Tok

அவர் என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசுவதோ, கடிதம் எழுதுவதோ கிடையாது, அப்படியிருக்கும்போது, நான் உயிருடன் இருக்கவேண்டும் என அவர் ஏன் விரும்புகிறார் என கேட்டிருந்தார் ராமோஸ்.

மேலும், தான் மரணமடையும்போது, தனக்கு அழகான உடை அணிவிக்கப்படவேண்டும் என்றும், மேக் அப் இடப்பட்டவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார் ராமோஸ். 

யாரோ சிலருடைய அத்துமீறல், அலட்சியம் காரணமாக, வாழவேண்டிய வயதில் இந்த உலகை விட்டுப் பிரிந்துபோய்விட்டார் ராமோஸ்!

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US