பூங்காவில் வைத்து 2 சிறுமிகளை சீரழித்த கும்பல்! 160 குற்றச்சாட்டுகளுடன் 4 பேர் கைது...
அவுஸ்த்திரேலியாவில் 15 வயது சிறுமிகளை 10 பேர் சேர்ந்து துஷ்பிரயோகம் செய்த வழக்கில் 4 பேர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் இரண்டு 15 வயது சிறுமிகள் Snapchat-ல் பழக்கமான ஒரு நண்பரை நேரில் சந்திக்க கடந்த டிசம்பர் 28-ஆம் திகதி Brisbane நகரில் உள்ள Calamvale District பூங்காவிற்கு வந்துள்ளனர்.
அங்கு அந்த நண்பர் உட்பட 10 பேர் சேர்ந்தது சிறுமிகளுக்கு மதுவையும் போதைப் பொருட்களையம் வலுக்கட்டாயமாக கொடுத்து, சித்ரவதை செய்துள்ளனர்.
பின்னர் சிறுமிகள் அரை மயக்கத்தில் இருந்த நிலையில், ஒரு மதுபான போத்தலை உடைத்து கொலை மிரட்டல் விடுத்து, அவர்கள் இருவரையும் தொடர்ந்து பல முறை மாறிமாறி கற்பழித்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கில் 19 ,20, 22, 21 வயதுடைய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒவ்வொருவரும் மீது 40 குற்றச்சாட்டுகள் என மொத்தம் 160 குற்றச்சட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
கற்பழிப்பு, கற்பழிப்பு நோக்கத்துடன் தாக்குதல், ஒரு குழந்தையை அநாகரீகமாக நடத்துவது, கொலை மிரட்டல், அநாகரீக புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும்.
இவர்கள் அனைவருக்கும் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.  
 
                                            
                                                                                         
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        