CSK அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகும் கரேத் பேட்டி
gareth batty to join as csk batting coach: CSK அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் கரேத் பேட்டி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
CSK பயிற்சியாளர் குழுவில் கரேத்
பேட்டி 2009 ஐபிஎல் தொடர் முதல் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங் ஓய்வு பெற்ற நிலையில், அந்த பதவிக்கு ஜாகீர் கான் நியமிக்கபட்டுள்ளார்.

அதை தொடர்ந்து பந்து வீச்சு பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிஎஸ்கே அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் கரேத் பேட்டி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுழற்பந்து வீச்சாளரான கரேத் பேட்டி, 2002 முதல் 2016 வரை இங்கிலாந்து தேசிய அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 10 ODI போட்டிகளில் விளையாடி, 20 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
மேலும், 261 முதல் தர போட்டிகளில் விளையாடி 682 விக்கெட்டுகளையும், 271 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 255 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
தற்போது, இங்கிலாந்து Surrey கவுண்டி அணியின் தலைமை பயிற்சியாளராக கேரத் பேட்டி உள்ளார். இவரது தலைமையில் Surrey அணி 2022, 2023, 2024 ஆகிய 3 தொடர்களில் அடுத்தடுத்து கவுண்டி சாம்பியன்ஷிப்பை வென்றது.

ஜாகீர் கான் மற்றும் கரேத் பேட்டி வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிய காலம் முதல் நல்ல நண்பர்களாக உள்ளனர்.
கடந்த 3 தொடர்களாக CSK அணி பிளே ஆப் செல்லாத நிலையில், 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னர் பயிற்சியாளர் குழுவில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.