இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும் பூண்டு பொடி.., எப்படி செய்வது?
இந்த சுவையான பூண்டு பொடி இட்லி, தோசை என அனைத்திற்கு அருமையாக இருக்கும்.
அந்தவகையில், ஆரோக்கியத்தையும், சுவையையும் அள்ளிக் கொடுக்கும் பூண்டு பொடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து- ¼ கப்
- கடலை பருப்பு- 2 ஸ்பூன்
- துவரம் பருப்பு- 1 ஸ்பூன்
- பொட்டுக்கடலை- 1 ஸ்பூன்
- எள்ளு- 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 3 கொத்து
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கட்டி பெருங்காயம்- சிறிதளவு
- புளி- சிறிதளவு
- காய்ந்த மிளகாய்- 8
- பூண்டு- 20 பல்
- கல் உப்பு- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் உளுந்து, கடலை பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறுதியாக பொட்டுக்கடலை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் எள்ளு சேர்த்து வறுத்து பொரிந்தவுடன் எடுத்துக்கொள்ளவும். அடுத்து இதில் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கட்டி பெருங்காயம் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அதே எண்ணெயில் புளி சேர்த்து வறுத்து எடுத்ததை தொடர்ந்து காய்ந்தமிளகாய் மற்றும் தோலுடன் பூண்டு பல்லை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக அந்த எண்ணெயில் கல் உப்பு சேர்த்து வறுத்து எடுத்து இவை அனைத்தையும் நன்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இந்த சுவையான பூண்டு பொடியை இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |