ரஷ்யாவில் திடீரென வெடித்து இடிந்து விழுந்த கட்டிடம்.! என்ன காரணம்?
ரஷ்யாவில் எரிவாயு வெடித்து இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் மாஸ்கோவிலிருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள Solidarnost என்ற கிராமத்திலே இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் சிறுமி உட்பட 3 பேர் உயரிழந்துள்ளனர் மற்றும் 6 பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கட்டிடத்தின் மையப் பகுதியில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பால் அது இடிந்து விழுந்ததாக ரஷ்யாவின் புலனாய்வுக் குழுவின் பிராந்தியக் கிளை கூறியது.
எரிவாயு சேவை பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்ற அடிப்படையில் குற்ற வழக்கைத் தொடங்கியுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Another natural gas #explosion in #Russia. Two storey residental building partly collapsed due to domestic gas explosion. Two people pronounced dead: female 11y/o and female 50y/o, eight people injured#disaster #Catastrophe pic.twitter.com/85GNTbRmPY
— Disaster (@Disastervid) September 11, 2021
பழைய உள்கட்டமைப்பு மற்றும் எரிவாயு பயன்பாடு தொடர்பான மோசமான பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக ரஷ்யாவில் எரிவாயு வெடி விபத்துகள் வழக்கமாகிவிட்டது.
இந்த வார தொடக்கத்தில் ஒன்பது மாடி குடியிருப்பில் ஏற்பட்ட எரிவாயு வெடிவிபத்தில் இரண்டு பேர் இறந்தனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.