ஈரான்-ஆப்கான் எல்லையில் வெடித்து சிதறிய எரிவாயு டேங்கர் லொறிகள்! தெறித்து ஓடிய மக்கள்: திகிலூட்டும் வீடியோ
ஈரான்-ஆப்கான் எல்லையில் எரிவுாயு மற்றும் எண்ணெய் டேங்கர் லொறிகள் பயங்கரமாக வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் Herat மாகாணத்தின் Islam Qala நகரில் உள்ள சுங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து எரிவாயு டேங்கர் லொறிகள் வெடித்து சிதறியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு பெரிய தீ இன்னும் எரிந்து கொண்டிருப்பதாகவும், அதைக் கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானிடம் உதவி கேட்டுள்ளதாக Herat மாகாண கவர்னர் கூறினார்.
விபத்துக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. சமூக வலைதளங்களில் வெடி விபத்து வீடியோக்கள் பல பகிரப்பட்டுள்ளன.
இதில் ஒன்றில், சற்று தொலைவில் டேங்கர் லொறிகள் வெடித்து சிதறுவதை கண்ட மக்கள் தெறித்து ஓடுவது வீடியோவாக வெளியாகியுள்ளது.
வெடி விபத்தில் சிக்கி எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்த தகவல் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
تصاویر جدید از آتشسوزی گسترده در گمرک «اسلام قلعه» هرات افغانستان pic.twitter.com/twSR5zwZqS
— خبرگزاری فارس (@FarsNews_Agency) February 13, 2021
ஆனால், குறிப்பிடத்தக்க பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.