முதல் லொட்டரி டிக்கெட்டிலேயே 3 கோடி வென்ற இளம்பெண்
அமெரிக்காவில் இளம் பெண்ணொருவர் வாங்கிய முதல் லொட்டரி டிக்கெட்டிலேயே அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
நார்த் கரோலினா மாநிலம் காஸ்டோனியாவில் வசிக்கும் காலா ஜெஃப்ரிஸ் (Kahla Jeffries) என்ற பெண், தனது வாழ்க்கையில் முதல் முறையாக வாங்கிய லொட்டரி டிக்கெட்டிலேயே 100,000 டொலர் (இலங்கை பணமதிப்பில் 3.36 கோடி ரூபா) வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
காலா, ஹிக்கரி க்ரோவ் ரோடில் உள்ள Will’s Food Store-ல் பெட்ரோல் நிரப்பச் சென்றபோது, தனது அதிர்ஷ்டத்தை ஒருமுறை சோதனை செய்து பார்க்கலாம் என “Cash Payday” என்ற ஸ்கிராட்ச்-ஆஃப் டிக்கெட்டை வாங்கினார்.

அதைச் சுரண்டியபோது, அவர் வெற்றி பெற்றிருப்பதை அறிந்தார். “நான் பார்த்தது சரி தானா என்று முதலில் நம்பவே முடியவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.
அவர் வெற்றியை உறுதிப்படுத்திய பின், நார்த் கரோலினா எஜுகேஷன் லொட்டரி அலுவலகத்தில் சென்று பரிசை பெற்றார். மாநில மற்றும் கூட்டாட்சி வரிகள் கழிக்கப்பட்ட பின், அவர் 72,018 டொலர் தொகையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.
காலா, இந்த வெற்றித் தொகையைப் பயன்படுத்தி ஒரு புதிய கார் வாங்கவும், தனது கல்விக்காக சேமிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம், Beginner’s Luck என்ற சொல்லை மீண்டும் உண்மையாக்கியுள்ளது. மக்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும் என்றும், அதிர்ஷ்டம் எப்போது, எங்கு வந்து சேரும் என்பதை யாரும் கணிக்க முடியாது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |