இந்தியாவின் முக்கிய துறையில் 5.29 லட்சம் கோடி முதலீடு! அதானியின் மிகப்பெரிய முடிவு
இந்தியாவின் முன்னணி தொழில் துறை நிறுவனமான அதானி குழுமம் மின்சார துறையில் சுமார் ரூ. 5.29 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
மின்சார துறையில் ரூ. 5.29 லட்சம் கோடி முதலீடு
இந்தியாவின் முன்னணி தொழில் துறை நிறுவனமான அதானி குழுமம் 2032 ம் ஆண்டுக்குள் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர்(ரூ. 5.29 லட்சம் கோடி) நாட்டின் மின்சார துறையில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
உலக அளவில் இந்தியா மின்சார உற்பத்தி துறையில் முன்னணி நாடாக முன்னேறி வருகிறது.
இந்நிலையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகம் ஆகியவற்றில் அதானி நிறுவனத்தின் இந்த முதலீட்டை செய்துள்ளது.
அதானியின் முதலீட்டு திட்டங்கள்
அதானி குழுமத்தின் இந்த முதலீடுகள் அதன் துணை நிறுவனங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி(AGEL)
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் துறையில் 21 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதானி பவர் நிறுவனம்
அதானி பவர் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய அனல் மின் உற்பத்தி நிறுவனமாக உள்ளது.
2032 ம் ஆண்டுக்குள் இந்த நிறுவனம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய பல மாநிலங்களில் 22 பில்லியன் டொலர் முதலீடு செய்யும்.
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ்(AESL)
AESL நிறுவனம் சுமார் 17 பில்லியன் டொலர் முதலீட்டை மின்சார விநியோகம் மற்றும் மேம்பாட்டு உள்கட்டமைப்புகளில் செலவிட திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |