Gen Z போராட்டத்தில் வெடித்த வன்முறை: நேபாளத்தில் சிறையிலிருந்து தப்பிய 1500 கைதிகள்
நேபாளத்தில் வெடித்துள்ள போராட்டங்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான கைதிகள் சிறையிலிருந்து தப்பி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிறையிலிருந்து தப்பிய 1500 -க்கும் அதிகமான கைதிகள்
நேபாளத்தில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து Gen Z தலைமையிலான போராட்டம் நாடு முழுவதும் வெடித்துள்ளது.
Gen Z போராட்டமானது செப்டம்பர் 8ம் திகதி வன்முறையாக வெடித்து, பல அரசு சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 7 க்கும் மேற்பட்ட சிறைகளில் இருந்து 1500 க்கும் அதிகமான சிறைக் கைதிகள் தப்பிச் சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
உடைக்கப்பட்ட சிறைச்சாலைகள்
நேபாளத்தில் வன்முறை வெடித்த இரண்டு நாட்களுக்கு பிறகு இந்த சிறை உடைப்பு சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாக நம்ப தகுந்த ஆதாரங்கள் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
கலவரத்தை கட்டுப்படுத்துவதில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதை பயன்படுத்தி சிறைக் கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
இதில் சிலர் போராட்டக்காரர்களால் விடுவிக்கப்பட்டதுடன், சில கைதிகள் சிறைச்சாலையின் கதவுகளை தாங்களே உடைத்து கொண்டு வெளியேறியுள்ளனர்.
நாட்டின் மோசமான சூழ்நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் நேபாள ராணுவம் செப்டம்பர் 10ம் திகதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |