நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு
நேபாளத்தில் வெடித்துள்ள போராட்டங்களுக்கு மத்தியில் இந்திய பெண் சுற்றுலா பயணி ஒருவர் இந்திய அரசிடம் உதவி கோரியுள்ளார்.
நேபாளத்தில் மோசமடையும் நிலைமை
நேபாளத்தில் சமூக ஊடகங்களின் தடைகளுக்கு எதிராக நடைபெறும் “Gen Z” போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.
போராட்ட குழுவினர், பிரதமர் வீடு, நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் முக்கிய பகுதிகள் ஆகியவற்றிக்கு தீ வைத்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர்.
நேபாளத்தில் சிக்கிய இந்தியாவின் பெண் சுற்றுலா பயணி
இந்நிலையில் கைப்பந்து போட்டிகளை நடத்துவதற்காக உபாசனா கில் என்ற இந்திய பெண் நேபாளத்திற்கு சென்றிருந்த நிலையில், அவர் தங்கியிருந்த ஹோட்டல் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், நான் உபாசனா கில், நான் தங்கியிருந்த ஹோட்டல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது, என்னுடைய உடைமைகள் முழுவதும் தீ வைக்கப்பட்ட ஹோட்டல் அறையில் இருந்தது, இந்த வீடியோவை பிரபுல் கார்க் அவர்களுக்கு அனுப்புகிறேன்.
தயவு செய்து இந்திய தூதரகமும், உதவக்கூடிய அனைவரும் எங்களுக்கு உதவ வேண்டும் என கில் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் தான் ஸ்பாவில் இருந்த போது பெரிய தடிகளுடன் ஒரு கும்பல் தன்னை துரத்தியதாகவும், அதிர்ஷ்டவசமாக தப்பியோடி உயிரை காப்பாற்றி கொண்டதாகவும் விவரித்துள்ளார்.
இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
நிலைமை மோசமடைந்து வருவதால், நேபாளத்தில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் நிலைமை சீராகும் வரை அனைவரும் தாங்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்குமாறு எடுத்துரைத்துள்ளனர்.
அத்துடன் இந்திய குடிமக்களுக்கு உதவும் விதமாக 977-980 860 2881 மற்றும் 977 - 981 042 6134 என்ற இரண்டு உதவி எண்களை வழங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |