ரூ.3,40,000 கோடியை இழந்த அதானி குழுமம்., கெளதம் அதானிக்கு கடுமையான பின்னடைவு
அதானி குழுமம் ரூ.3,40,000 கோடியை இழந்துள்ளது.
கெளதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், 2025-ஆம் நிதியாண்டில் கடுமையான சந்தை சரிவை சந்தித்துள்ளது.
குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 21% குறைந்து, சுமார் ரூ.3.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு பங்குச் சந்தை மாற்றங்கள், ஒழுங்குமுறை விசாரணைகள் மற்றும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக அமைந்துள்ளன.
அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள்
அதானி கிரீன் எர்ஜி அதிகளவில் இழப்பை சந்தித்துள்ளது. மார்ச் 2024-ல் ரூ.2.90 லட்சம் கோடியாக இருந்த அதன் மதிப்பு 2025 மார்ச் 21-ஆம் திகதி ரூ.1.46 லட்சம் கோடியாக சரிந்தது.
265 மில்லியன் டொலர் அளவிலான ஊழல் வழக்கு தொடர்பாக கெளதம் அதானியும், அவரது மருமகன் சாகர் அதானியும் சந்தித்த குற்றச்சாட்டுகள் இதற்குக் காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.
பாரிய இழப்பை அடைந்த முக்கிய நிறுவனங்கள்
அதானி என்டர்பிரைசஸ் - ரூ.94,096 கோடி (27%) இழப்பு
அதானி போர்ட்ஸ் & SEZ - ரூ.33,029 கோடி (11.4%) இழப்பு
அதானி டோட்டல் கேஸ் - ரூ.32,411 கோடி (31.84%) இழப்பு
அதானி எனர்ஜி சால்யூஷன்ஸ் - ரூ.14,547 கோடி (18.95%) இழப்பு
ACC சிமெண்ட் - 23.10% சரிவு
அம்புஜா சிமெண்ட் - 15.92% சரிவு
அதானி வில்மார் - 17.35% சரிவு
சாங்கி இண்டஸ்ட்ரீஸ் - 36.84% சரிவு
NDTV - 41.58% சரிவு
சர்வதேச பொருளாதார பாதிப்புகள்
உலகளாவிய வட்டி விகித உயர்வு, அமெரிக்கா-சீனா வர்த்தக போர், மற்றும் டொனால்டு ட்ரம்ப் ஆட்சி அமையலாம் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை, வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதானி பங்குகளை விற்பனை செய்ய வைத்துள்ளது.
தற்போதைய சிக்கல்களுக்கு மத்தியில், அதானி குழுமம் தனது உள்கட்டமைப்பு மற்றும் புதுமை சக்தி திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது. எதிர்கால வளர்ச்சிக்கு இந்திய அரசு வழங்கும் ஆதரவு மற்றும் பசுமை ஆற்றல் வளர்ச்சி திட்டங்கள், குழுமம் மீண்டும் வலுவாக உயரும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |