வைர வியாபாரியை மணந்த தமிழ்ப்பட நடிகை., சனா கானின் சொத்து மதிப்பு தெரியுமா?
முன்னாள் தமிழ்ப்பட நடிகை சனா கான் மற்றும் அவரது கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா?
முன்னாள் நடிகை சனா கான் 2020-ஆம் ஆண்டு திரையுலகை விட்டு விலகி, முஃப்தி அனஸ் சையத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
குஜராத்தை சேர்ந்த இஸ்லாமிய அறிஞரும், வைர வியாபாரியுமான முஃப்தி அனஸ், வர்த்தக உலகில் மிகவும் வெற்றிகரமானவர்.
நவம்பர் 19, 2020, இவர்களின் திருமணம் மிகச் சாதாரணமான முறையில் நடந்தது.
தற்போது இவர்கள் இரண்டு மகன்கள், சையத் ஹசன் ஜமீல் மற்றும் சையத் தாரிக் ஜமீல் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
சனா கான் மற்றும் அவரது கணவரின் சொத்துமதிப்பு
சனா கான் திரையுலகில் இருந்து விலகிய பிறகும் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளார்.
முஃப்தி அனஸின் சொத்து மதிப்பு ரூ.250 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தம்பதியினர் மும்பையில் இரண்டு சொகுசு வீடுகளை கொண்டுள்ளனர், அவற்றின் மதிப்பு ரூ.7 கோடி மற்றும் ரூ.4 கோடி ஆகும்.
சனா கானின் மாற்றம்
சமீபத்தில், ருபினா திலாயிக் நடத்தும் "கிஸினே படாயா நஹி" என்ற பாட்காஸ்டில் சனா கான் தனது வாழ்க்கை மாற்றத்தைப் பற்றி பேசினார்.
பழைய வாழ்க்கை முறையிலிருந்து ஆன்மீகத்திற்கு மாறியதற்கான காரணங்களையும், சமூக ஊடகங்களில் தனது முன்னாள் வாழ்க்கை உண்மையானதல்ல என உணர்ந்ததையும் அவர் பகிர்ந்துக்கொண்டார்.
"ஒரு மனிதன் தனது மனைவியை மரியாதையுடன் அணுக வேண்டும். சிலர் தங்கள் மனைவியரை குறைவான உடைகளை அணியச் செய்து, அதை பெருமையாக நினைக்கிறார்கள். இது என்ன மரியாதை?" என அவர் விமர்சித்தார்.
தற்போது, முஃப்தி அனஸ் - சனா கான் தம்பதியினர் ரூ.300 கோடி சொத்து மதிப்புடன் வாழ்ந்தாலும், மிக எளிமையான வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |