முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளி.,இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் கௌதம் அதானி முதலிடம்
ஹுருன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
11.6 லட்சம் கோடி
2024 ஹுருன் இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரபல கோடீஸ்வரர் கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் 11.6 லட்சம் கோடி சொத்துக்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர்.
இப்பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி 10,14,700 கோடி சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தை தமிழரான ஷிவ் நாடார் மற்றும் HCL டெக்னாலஜிஸ் குடும்பம் பிடித்துள்ளது.
21 வயதான கோடீஸ்வரர்
கடந்த ஐந்து ஆண்டுகளில் 6 நபர்கள் தொடர்ந்து இந்தியாவின் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
இந்தியாவின் இளைய கோடீஸ்வரராக 21 வயதான கைவல்யா வோஹ்ரா (3,600 கோடி) பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
பிரபல நடிகர் ஷாருக் கான் முதல் முறையாக ஹுருன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |