வெறும் 15 நிமிடங்களில்... ரூ 53,000 கோடி ஆதாயம் ஈட்டிய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்
வியாழக்கிழமை ஒரே நாளில் வெறும் 15 நிமிடங்களில் ரூ 53,000 கோடியை ஆதாயமாக ஈட்டியுள்ளார் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி.
2 சதவிகிதம் உயர்ந்தது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் 47வது ஆண்டு பொதுக்கூட்டமானது வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசத்தொடங்கியதும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 2 சதவிகிதம் உயர்ந்தது.
இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 53,000 கோடி அதிகரித்தது. ஆகஸ்டு 29ம் திகதி ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ 9,82,287 கோடி என்றே தெரிய வந்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் துவங்கிய போது பங்குகளின் மதிப்பு 2.64 சதவிகிதம் அதிகரித்து, அந்த நாளின் உச்ச விலையாக ரூ 3074.80 என பதிவானது.
சந்தை மதிப்பு ரூ 20.58 லட்சம் கோடி
கூட்டம் தொடங்கும் முன்னர் ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பு ரூ 3014.95 என்றே வர்த்தகம் நடந்துள்ளது. ஆனால் மதியம் 2.35 மணிக்கு முகேஷ் அம்பானி பேசத்தொடங்கியதும், சட்டென்று 1.84 சதவிகிதம் அதிகரித்து ரூ 3050.95 என வர்த்தகம் நடந்துள்ளது.
இருப்பினும் மாலையில் வர்த்தகம் முடியும் போது ரிலையன்ஸ் பங்குகளின் விலை ரூ 3,042.90 என்றே பதிவானது. ஆகஸ்டு 29ம் திகதி வரையான தரவுகளின் அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 20.58 லட்சம் கோடி என்றே தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |