2.75 கோடி செலவு.. ஆண்டுக்கு 5000 மக்களுக்கு! கம்பீரின் அதிரடி பதில்
எம்.பி ஆக இருந்துகொண்டு ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்துகிறீர்களே என்ற விமர்சனங்களுக்கு கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் பாஜக எம்.பி ஆக உள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஆலோசகராகவும் காம்பீர் செயல்பட்டார்.
ஆனால், பொறுப்பான பதிவில் இருந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி நேரத்தை வீணடிக்கிறீர்களே என கம்பீரின் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.
Photo Credit: PTI
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'நான் ஏன் ஐபிஎல்லில் வர்ணனை செய்கிறேன் அல்லது வேலை செய்கிறேன் என்றால், 5000 பேருக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக தான். ஒவ்வொரு மாதமும் இதற்காக 25 லட்சம் செலவிடுகிறேன். இது தோராயமாக ஆண்டுக்கு 2.75 கோடி ஆகும். மேலும், நூலகம் கட்ட 25 லட்சம் செலவழித்துள்ளேன்.
நான் என் சொந்த செலவில் இருந்து தான் இந்த பணத்தை எல்லாம் செலவு செய்கிறேன், எம்.பி நிதியில் இருந்து எடுக்கவில்லை.
ஐபிஎல்லில் வேலை செய்கிறேன் என்று சொல்வதில் எனக்கு வெட்கமில்லை. நான் வேலை செய்வதால் தான் 5000 பேருக்கு உணவளிக்க, நூலகத்தை நிறுவ முடிகிறது. நான் செய்யும் அனைத்திற்கும் ஒரு இறுதி இலக்கு உள்ளது' என தெரிவித்துள்ளார்.