7 நாட்களில் ரூ.83,000 கோடி.., உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானிக்கு எத்தனாவது இடம் தெரியுமா?
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 7 நாட்களில் மட்டும் ரூ.83 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது.
உலக கோடீஸ்வரர்கள் வரிசை
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 7 நாட்களில் 10 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.83 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளதாக புளும்பெர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதனால் அவரது நிகர சொத்து மதிப்பு 70.3 பில்லியன் டொலரை (இந்திய மதிப்பில் ரூ.5.83 லட்சம் கோடி) எட்டியுள்ளது. இதனால், உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் கௌதம் அதானி நான்கு இடங்கள் முன்னேறி 16 -வது இடத்தை பிடித்துள்ளார்.
புளும்பெர்க் பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி ரூ.7.50 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். தற்போது, டாப் 20 பட்டியலில் இரண்டாவது இந்தியராக அதானி உள்ளார்.
அதானியின் வர்த்தகம்
அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களும் வர்த்தகத்தில் ஏற்றம் கண்டதால் ஒட்டு மொத்த சந்தை மூலதனம் ரூ.13 லட்சம் கோடியை எட்டியது.
புளும்பெர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்ததன்படி, "அதானி கிரீன் எனர்ஜி 20 % அதிகரித்து ரூ.1.348-க்கும், அதானி எனர்ஜி 16.38 % உயர்ந்து ரூ.1,050-க்கும், அதானி டோட்டல் கேஸ் 15.81 % அதிகரித்து ரூ.847.90-க்கும், அதானி என்டர்பிரைசஸ் 10.90 % உயர்ந்து ரூ.2 ஆயிரத்து 805 -க்கும்" வர்த்தகமாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |