சட்டம் படித்து Strawberry விற்கும் இளம்பெண்! இந்திய பிரதமரே பாராட்டும் அளவுக்கு வருமானம்
சட்டம் படித்துவிட்டு ஸ்ட்ராபெர்ரி சாகுபடியில் மாதந்தோறும் இளம்பெண் ஒருவர் சுமார் ரூ.9 லட்சம் சமாதித்து வருகிறார்.
யார் இவர்?
தற்போதை காலத்தில் இளைஞர்கள் பலரும் நிறுவனத்தில் வேலை பார்ப்பதை விட சொந்தமாக தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் குர்லீன் சாவ்லா.
இவர், உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவராவார். புனேயில் உள்ள இந்திய சட்ட சங்கத்தின் சட்ட கல்லூரியில் குர்லீன் சாவ்லா பட்டம் பெற்றுள்ளார். இருந்த போதிலும், வக்கீல் வேலையில் இவருக்கு ஆர்வமில்லை. வேறு எதாவது ஒரு தொழிலில் சாதிக்க வேண்டும் என நினைத்தார்.
பின்னர், கொரோனா வைரஸ் காரணமாக சொந்த ஊரான ஜான்சிகே பெட்டி படுக்கையுடன் குர்லீன் சாவ்லா திரும்பினார்.
ஸ்ட்ராபெர்ரி சாகுபடி
அப்போது, வீட்டில்இருக்கும் போது ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. இதற்கு, சோதனை முயற்சியாக முதலில் வீட்டில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்ய ஆரம்பித்தார். இவர் இதற்கு ஒன்லைன் தளங்களில் கற்பித்து இந்த சாகுபடியை செய்தார். அது பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது.
பின்னர், தனது தந்தையின் தோட்டத்தில் சுமார் 1.5 ஏக்கர் வறண்ட நிலத்தில் ஸ்ட்ராபெர்ரி செடிகளை பயிரிட்டார். அதற்கு, தந்தையும் உடன் நின்றதால் தற்போது நல்ல வருமானம் பெற்று வருகிறார்.
தினமும் 70 கிலோ ஸ்ட்ராபெர்ரி விற்பனை செய்து, சுமார் ரூ.30,000 வரை குர்லீன் சாவ்லா பெற்றார். இதனைத்தொடர்ந்து, ஜான்சி ஆர்கானிக்ஸ் என்ற இணையதளத்தை உருவாக்கி பழங்களை ஒன்லைன் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்தார்.
குர்லீன் சாவ்லாவின் முயற்சியை பாராட்டி இந்திய பிரதமர் மோடியே மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |