இரு கைகளையும் இழந்த 9 வயது காஸா சிறுவன்! மனதை உலுக்கும் புகைப்படம்..World Press Photo ஆக தெரிவு
இஸ்ரேல் தாக்குதலில் இரண்டு கைகளையும் இழந்த 9 வயது சிறுவனின் புகைப்படம் World Press Photo 2025 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
9 வயது சிறுவனின் புகைப்படம்
2023ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில், காஸாவில் 51,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மேலும், குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் காயம் மற்றும் உடல் உறுப்பு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் இரு கைகளையும் இழந்த மஹ்மூத் அஜ்ஜோர் என்ற 9 வயது சிறுவனின் புகைப்படம் "World Press Photo 2025" ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு மார்ச்சில் இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து தப்பிச் செல்லும்போது நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில், மஹ்மூத்தின் ஒரு கை துண்டிக்கப்பட்டு, மறு கை சிதைந்தது.
முதல் வாக்கியம்
சமர் அபு எலுஃப் என்ற புகைப்பட கலைஞர், நியூயார்க் டைம்ஸ் இதழுக்காக இப்புகைப்படத்தை எடுத்தார். இவர் கத்தாரை தளமாகக் கொண்டு இயங்கும் பாலஸ்தீன புகைப்படக் கலைஞர் ஆவார்.
இந்தப் புகைப்படத்தில் மஹ்மூத் அஜ்ஜோரின் இரு தோள்பட்டைகளுக்கும் கீழ் கைகள் இன்றி இருப்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமர் அபு எலுஃப் கூறுகையில், "மஹ்மூத்தின் தாயார் எனக்கு விளக்கிய மிகவும் கடினமான விடயங்களில் ஒன்று. மஹ்மூத் தனது கைகள் துண்டிக்கப்பட்டதை முதன்முதலில் உணர்ந்தபோது, அவன் தாயிடம் கூறிய முதல் வாக்கியம், 'நான் உன்னை எப்படி கட்டிப்பிடிக்க முடியும்?' என்பதுதான்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |