காஸா போர்நிறுத்த நாளை அறிவித்த ட்ரம்ப்! வெளியான தகவல்
ட்ரம்பின் அழைப்பை ஏற்று இஸ்ரேல்-காஸா போர்நிறுத்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர்நிறுத்தத்திற்கு உடன்பாடு
காஸா மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதலை நடத்தி வருகிறது. போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் காஸாவும், இஸ்ரேலும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிபிசி ஊடகத்திற்கு பாலஸ்தீன அதிகாரி ஒருவர் அளித்த நேர்காணலில், "அமெரிக்காவின் போர் நிறுத்த அழைப்பை பாலஸ்தீனம் ஏற்றுக்கொண்டுள்ளதை ட்ரம்ப் உறுதி செய்திருக்கிறார்.
இஸ்ரேலும் போர்நிறுத்தம் தொடர்பான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது. எனவே அடுத்த வாரத்தில் இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு தயாராகிவிடும் என ட்ரம்ப் கூறினார்" என்று தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்தம் ஏற்பட்டால் இருதரப்பில் இருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |