காசாவில் அதிகரிக்கும் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை: வீடியோ வெளியிட்ட ஹமாஸ்
காசாவில் இஸ்ரேலிய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
20,000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான தாக்குதல் இரண்டரை ஆண்டுகளை தாண்டியுள்ளது.
இந்த தாக்குதலில் பாலஸ்தீனத்தின் காசா நகரை இஸ்ரேல் சுற்றி வளைத்து மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது.
காசாவில் இந்த தாக்குதலால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.
Reuters, AP, AFP
அத்துடன் இதுவரை 21,731க்கும் அதிகமான பொதுமக்கள் காசா நகரில் கொல்லப்பட்டுள்ளனர்.
பிணைக் கைதிகள் வீடியோ
இந்நிலையில் இஸ்ரேலின் 3 பிணைக் கைதிகளின் வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். அதில் தோன்றும் பிணைக் கைதிகள் தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து பேசினர்.
இதையடுத்து ஹமாஸ் பிணைக் கைதிகளின் வீடியோக்களை வெளியிட்டதற்கு இஸ்ரேல் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
Reuters, AP, AFP
அத்துடன் மருத்துவ உதவி தேவைப்படும் முதியவர்களை வீடியோவில் தோன்ற செய்து அது அந்த வயதானவர்களின் குடும்பங்களுக்கு எதிராக ஹமாஸ் செய்யும் குற்றம் என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |