காசா - எகிப்து ரஃபா எல்லை கடப்பு விரைவில் திறக்கப்படும்: இஸ்ரேல் எடுத்துள்ள அதிரடி முடிவு
இஸ்ரேல் - எகிப்து எல்லை மீண்டும் திறப்பது குறித்து இஸ்ரேல் முக்கிய முடிவு எடுத்துள்ளது.
காசா - எகிப்து எல்லை திறப்பு
காசா மற்றும் எகிப்திற்கு இடையிலான ரஃபா எல்லை கடப்பை மீண்டும் திறக்க இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
காசாவில் மீட்கப்படாத கடைசி பிணைக் கைதியின் உடல் மீட்கப்பட்ட பிறகு இந்த செயல்முறை நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது மீட்கப்படாத கடைசி பிணைக்கைதியான உயிரிழந்த வீரர் மாஸ்டர் சர்ஜெண்ட் ரன் க்விலி தொடர்பாக நடைபெற்ற தேடுதல் வேட்டையில் கிடைத்த உளவுத் தகவல்களை சேகரித்து இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் ஆய்வு செய்த பிறகு இந்த எல்லை கடப்பு நடவடிக்கை செயல்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எல்லை திறப்பின் முக்கிய நடைமுறைகள்
இந்த ரஃபா எல்லை கடப்பை பாதசாரிகள் மட்டுமே கடக்க முடியும்.
இந்த ரஃபா எல்லையை கடக்கும் அனைத்து பாதசாரிகளும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இந்த காசா - எகிப்து எல்லை திறப்பு குறித்த அதிகாரப்பூர்வமான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, இருப்பினும் இந்த வார இறுதிக்குள் ரஃபா எல்லை கடப்பு திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |