காசாவிற்கான உணவு கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டது: ஐக்கிய நாடுகள் சபை வேதனை
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே நடைபெற்று வரும் போரினால் காசா பகுதியில் உணவு பொருட்கள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்டதாக என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
காசாவில் உணவு தட்டுப்பாடு
இஸ்ரேல்-ஹமாஸ் படையினருக்கு இடையிலான போர் நடவடிக்கை 32வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் நடவடிக்கையில் இதுவரை மொத்தம் 11,330 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தங்கள் வாழ்க்கையை தக்கவைத்து கொள்ள போராடி வருகின்றனர்.
Gaza Strip is almost out of food - UN
— NEXTA (@nexta_tv) November 6, 2023
Over the past few weeks, the entry points into Gaza have been practically closed, with the exception of the Rafah border crossing.
Despite a constant increase in the amount of aid entering the Gaza Strip, it is not enough to meet the needs… pic.twitter.com/dGd66yPL3u
இந்நிலையில் காசாவில் வாழும் மக்களுக்கான உணவு பொருட்கள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
காசாவிற்கான சர்வதேச உதவிகள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ரஃபா எல்லை நுழைவை தவிர மற்ற காசாவின் அனைத்து நுழைவு புள்ளிகளும் அடைக்கப்பட்டுள்ளன.
The UN family is working around the clock to deliver food & other vital supplies to Gaza.
— United Nations (@UN) November 6, 2023
While there has been a steady increase in aid entering from Egypt, expanded humanitarian access is urgently required to meet growing needs & save lives. https://t.co/zbJRWB1BxS pic.twitter.com/RUvnBm7n5i
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |