மிக மோசமாக நடத்தப்பட்டோம்... இஸ்ரேல் ராணுவத்தினர் மீது காஸா ஆதரவாளர்கள் புகார்
காஸா மீதான இஸ்ரேலின் கடற்படை முற்றுகையை மீற முயன்றபோது தடுத்து வைக்கப்பட்ட ஆர்வலர்கள், இஸ்ரேலிய வீரர்களால் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மிக மோசமான முறையில்
தாங்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் தாக்கப்பட்டதாகவும், தங்கள் மீது டேசர் கருவிகளைப் பயன்படுத்தியதாகவும் தாக்குதல் நாய்களை தங்கள் மீது ஏவியதாகவும் விவரித்துள்ளனர்.

இஸ்ரேல் கடற்கரையிலிருந்து சுமார் 250 மைல்கள் தொலைவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில், 50 படகுகளைக் கொண்ட பன்னாட்டுக் குழுவினர் வழிமறிக்கப்பட்டனர்.
மேலும், ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த குறைந்தபட்சம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இராணுவப் படகுகளில் ஏற்றப்பட்டு, தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்டோட் துறைமுகத்தில் இருந்த ஒரு பெரிய இராணுவக் கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கே அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய ராணுவத்தினரால் தாங்கள் மிக மோசமான முறையில் நடத்தப்பட்டதாகவும் அவர்கள் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேலின் தீவிர வலதுசாரி பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் காஸாவிற்குச் சென்ற கப்பல் தொடரிலிருந்து வந்த செயற்பாட்டாளர்களை மிக மோசமாக கேலி செய்யும் காட்சி வெளியாகி உலகளாவிய சீற்றத்தைத் தூண்டியது.

ஆடைகளைக் களைந்ததாகவும்
கைதிகளை அவர் கமெரா முன்னிலையில் நடத்திய விதத்தை வெளிநாட்டுத் தலைவர்கள் கண்டித்துள்ளனர். மேலும், பல நாடுகள் தங்களது கவலைகளைத் தெரிவிப்பதற்காக இஸ்ரேலிய தூதர்களை அழைத்துள்ளன.
ஆனால், காஸா ஆர்வலர்களை மோசமாக நடத்தியதாக வெளியானத் தகவல் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என்றே இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்பட்ட சுமார் 420 ஆர்வலர்கள், வியாழக்கிழமை அன்று துருக்கிக்குப் புறப்பட்டனர்; அவர்களில் பலர் சாம்பல் நிற உடைகளையும் அரபு கஃபிய்யாக்களையும் அணிந்திருந்தனர்.
மேலும், சோதனை என பெண்களின் ஆடைகளைக் களைந்ததாகவும் பலர் புகார் அளித்துள்ளனர். சில ஆண்களுக்கும் அப்படியான நெருக்கடி இஸ்ரேல் ராணுவத்தினரால் நடந்துள்ளது. மட்டுமின்றி, உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு இலக்கானதாகவும் பல பெண் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |