இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: மருத்துவரின் 9 குழந்தைகள் உயிரிழப்பு
காசாவில் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் அந்நாட்டு மருத்துவரின் 9 குழந்தைகள் கொல்லப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 குழந்தைகளை இழந்த காசா மருத்துவர்
தெற்கு காசாவில் உள்ள ஒரு வீட்டில் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், ஒரு மருத்துவரின் பத்துக் குழந்தைகளில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை நடந்த இந்தத் தாக்குதலில், அவரது உயிருடன் இருக்கும் மகன் பலத்த காயமடைந்துள்ளதுடன், அவரது கணவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
கான் யூனிஸுக்கு தெற்கே அமைந்துள்ள இந்த வீடு, நாசர் மருத்துவ வளாகத்தில் உள்ள அல் தஹ்ரீர் கிளினிக்கில் குழந்தை நல மருத்துவராக பணிபுரியும் டாக்டர் அலா அல் நஜ்ஜார் என்பவருக்குச் சொந்தமானது.
இஸ்ரேலிய தாக்குதலின் போது டாக்டர் அல் நஜ்ஜார் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளியான காட்சிகள்
ஹமாஸ் அமைப்பால் நடத்தப்படும் பாலஸ்தீனிய சிவில் பாதுகாப்புப் படையினர் வெளியிட்ட திகிலூட்டும் காட்சிகளில், மீட்புப் படையினர் தீயை அணைத்து இடிபாடுகளை அகற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
ஹமாஸ் அமைப்பால் நடத்தப்படும் பாலஸ்தீனிய சிவில் பாதுகாப்புப் படையினர் வெளியிட்ட திகிலூட்டும் காட்சிகளில், மீட்புப் படையினர் தீயை அணைத்து இடிபாடுகளை அகற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
ஹமாஸ் அமைப்பால் நடத்தப்படும் காசா சுகாதார அமைச்சகத்தின் பொது இயக்குனர் டாக்டர் முனீர் அல்பௌர்ஷ் கருத்துப்படி, உயிரிழந்த குழந்தைகளில் மூத்த குழந்தையின் வயது 12 மட்டுமே ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |