காசாவை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல: இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு விளக்கம்
காசாவை முழுவதுமாக ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பு
பிணைக் கைதிகளை விடுவிக்கும் முயற்சி மற்றும் ஹமாஸ் படையினரை முழுமையாக தீர்த்துக் கட்டும் நடவடிக்கையை மேற்கோள் காட்டி, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு காசாவில் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த போவதாக அறிவித்தார்.
நெதன்யாகுவின் திட்டத்திற்கு அவரது அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
காசாவை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல
இந்நிலையில் காசாவை முழுவதும் ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல, மாறாக அவற்றை விடுவிப்பது தான் எங்களின் இலக்கு என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஆனால் சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிராக பொய் பிரசாரங்கள் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் பொதுமக்கள் கொல்லப்படுவது, உணவு பற்றாக்குறை ஆகிய அனைத்துக்கும் ஹமாஸ் படைகள் தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் ராணுவ நடவடிக்கையை குறுகிய காலத்தில் முடித்து, ஹமாஸ் படையினரை முழுவதுமாக அழிப்பது மட்டும் ஒரே வழி எனவும் தெரிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேல் அல்லாத சிவில் நிர்வாகத்தை பொறுப்பில் அமர வைப்பதே இலக்கு என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |