காசா அமைதி திட்டம்: ஒப்பந்தத்தில் முதல் ஆளாக கையெழுத்திட்ட டிரம்ப்
காசா அமைதி திட்ட ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
கையெழுத்தான காசா அமைதி ஒப்பந்தம்
எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்(Sharm El-Sheikh) நகரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில், காசாவுக்கான சர்வதேச அமைதி ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தானது.
இந்த வரலாற்று ஒப்பந்தத்தில் முதல் நபராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இதையடுத்து, “இந்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது, இதை நம்ப முடிகிறதா? இந்த ஒப்பந்தம் நிச்சயமாக நிலைத்து இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பை தொடர்ந்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன், எகிப்து தலைவர் அப்துல் ஃபத்தா அல் சிசி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இது நம்ப முடியாத நாள்!
அமைதி ஒப்பந்தம் குறித்து பத்திரிகையாளரிடம் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்தில், இது உலகிற்கே நம்ப முடியாத நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக செயல்பட்டால் மத்திய கிழக்கில் ஏற்பட வாய்ப்பு இருக்கும் மூன்றாம் உலக போர் தடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |