காசா அமைதி பேச்சுவார்த்தை குழு: இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த டிரம்ப்
காசா போர் நிறுத்த அமைதி குழுவில் அங்கம் வகிக்க இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
காசாவில் அமைதி
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தலையீட்டுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக ஹமாஸ் தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது.

அதே சமயம் இஸ்ரேலிய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்துள்ளது.
தற்போது போர் நிறுத்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
போர் நிறுத்தத்தை தொடர்வது தொடர்பாக ஆலோசிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசனை குழு ஒன்றை அமைத்துள்ளார்.
இந்த ஆலோசனை குழுவில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இடம்பெற வேண்டும் என்று டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு அழைப்பு
இந்நிலையில் காசா போர் நிறுத்த அமைதி பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
அதைப்போல அமைதி பேச்சுவார்த்தை குழுவில் சேருமாறு துருக்கி, ஜேர்மனி, கனடா, எகிப்து, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அர்ஜென்டினா, மொராக்கோ, இத்தாலி, இந்தோனேசியா ஆகிய 60 நாடுகளின் தலைவர்களுக்கும் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |