இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இடையே காஸாவில் வேகமாக பரவும் நோய்கள்! WHO எச்சரிக்கை
காசாவில் மூளைக்காய்ச்சல், சின்னம்மை, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவுவதாக WHO தெரிவித்துள்ளது.
கடும் சேதம்
இஸ்ரேல் தொடர்ச்சியாக காசா மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனமான WHO வெளியிட்டுள்ள அறிக்கையில், காசாவில் வாழும் குழந்தைகள் இடையே 66 சதவீதம் பேர் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mahamud Hams/AFP
நோய்களின் பரவல்
அத்ததுடன் மூளைக்காய்ச்சல், சின்னம்மை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் அங்கு பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குண்டுகள் மற்றும் தோட்டங்களில் இருந்து தப்பிய காசா மக்கள், தங்கள் தற்காலிக தங்குமிடங்களை வெள்ளத்தில் இழந்துள்ளனர்.
Mahamud Hams/AFP
மேலும் மழை, உணவு, குடிநீர் பற்றாக்குறையால் தவித்து வரும் காசா மக்கள் நோய்களின் பரவலையும் அதிகளவில் எதிர்கொண்டுள்ளனர்.
நவம்பர் 29 முதல் டிசம்பர் 10 வரை 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் வயிற்றுப்போக்கு 66 சதவீதம் அதிகரித்து 59,895 ஆகவும், ஏனைய மக்களில் 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக WHO தனது தரவுகளில் கூறியுள்ளது.
ஐ.நா சுகாதார நிறுவனமானது, காசாவில் உள்ள சுகாதார அமைப்பு மற்றும் பிற சேவைகள் சரிந்து வருவதற்கான முழுமையான தன்கால்கள் இல்லாததால், புள்ளிவிவரங்கள் முழுப் படத்தையும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
Mohammed Abed/AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |