130 விண்ணப்பங்களில் 2க்கு மட்டுமே ஒப்புதல்: கனடாவால் நிராகரிக்கப்படும் காசா மாணவர்கள்
காசா மாணவர்களுக்கான கல்வி அனுமதி கனடாவில் பெருமளவில் நிராகரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் நிராகரிக்கப்படும் காசா மாணவர்கள்
கனடாவில் கல்வி கற்பதற்காக விரும்பும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் பெரும்பாலானவை அந்நாட்டு மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக ப்ளாக்லாக்ஸ் ரிப்போர்ட்டர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.

ஆனால் ஜூன் 17ம் திகதி வெளியான காசாவின் சூழல் தொடர்பாக கனடாவின் பதில் என்ற அரசாங்க குறிப்பில், விண்ணப்பிக்கும் மாணவர்களின் கைரேகை மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகிய கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மேம்பட்ட பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள் காசாவில் இருக்கும் போதே அவர்கள் தொடர்பான ஆரம்பகட்ட சோதனைகளை கனடாவால் நடத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காசாவை விட்டு வெளியே வர முடிந்தவர்கள் மூன்றாவது நாட்டிலும் இந்த பயோமெட்ரிக் பதிவுகளை செய்து முடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
2 பேருக்கு மட்டுமே ஒப்புதல்
பாலஸ்தீன மாணவர்கள் மற்றும் ஆபத்தில் உள்ள அறிஞர்கள் வலையமைப்பு தகவல்படி, கனடாவில் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக விண்ணப்பித்த 130 மாணவர்களில் 2 பேரின் விண்ணப்பங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அமைச்சகத்தின் தகவல்படி, மொத்த விண்ணப்பங்கள் 37, அதில் ஒப்புதல் அளிக்கப்பட்டவை 2, நிராகரிக்கப்பட்டவை 14, திரும்ப பெறப்பட்டவை 4 மீதமுள்ளவை நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |