இஸ்ரேலில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியர்: நீடிக்கும் மர்மமான பின்னணி: இளைஞர் கைது
இஸ்ரேலின் ஜெருசலேமில் இந்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர் சடலமாக மீட்பு
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் உள்ள கட்டமோன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் செய்தி படி, தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், 40 வயது மதிக்கத்தக்க நபர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டுபிடித்தனர்.
மோரியா காவல் நிலையத்தின் தலைவர் யுவால் ரூவன், இந்த சோக சம்பவத்தை உறுதிப்படுத்தி இருப்பதுடன் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதை தெரிவித்துள்ளார்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதில் குற்றப் பின்னணி இருக்கலாம் என்று Ynetnews செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் உயிரிழந்தவரின் அடையாளத்தை இதுவரை அதிகாரிகள் வெளியிடவில்லை.
அதே சமயம் இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய நபராக கருதப்படும் எலாட்டைச் சேர்ந்த 31 வயது நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 2024ம் ஆண்டு நிலவரப்படி, 32,000 இந்திய தொழிலாளர்கள் இஸ்ரேலில் வசித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |