காசாவில் சண்டை முடிவுக்கு வந்துவிட்டது: மூத்த ஹமாஸ் அதிகாரி அறிவிப்பு
காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.
காசாவில் நிரந்தர போர் நிறுத்தம்
அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விளைவாக காசாவில் சண்டை முடிவு வந்து இருப்பதாகவும், நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாகவும் உயர்மட்ட ஹமாஸ் அதிகாரி கலீல் அல் ஹையா தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார் எனவும் அல் ஹையா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இருதரப்பு சண்டைகளும் நிரந்தரமாக முடிந்து விட்டதற்கான உத்தரவாதங்களை மத்தியஸ்தர்கள் மற்றும் அமெரிக்க தரப்பு அதிகாரிகளிடம் இருந்து பெற்று இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கலீல் அல் ஹையா சமீபத்தில் கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய ஹமாஸ் அதிகாரிகள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய அரசாங்கத்தின் முடிவு?
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வது குறித்து மாலை நடைபெறும் இஸ்ரேலிய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் என்று அந்நாட்டின் அரசு செய்தி தொடர்பாளர் ஷோஷ் பத்ரோசியான் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |