காஸாவில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட பிரித்தானியர்: 10 பேர்களுக்கு எதிராக திரட்டப்பட்ட ஆவணம்
காஸாவில் இஸ்ரேலுக்காக போரிட்ட பத்து பிரித்தானியர்கள் மீது இங்கிலாந்தின் முன்னணி மனித உரிமை சட்டத்தரணிகளில் ஒருவர் போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கண்மூடித்தனமான தாக்குதல்
தொடர்புடைய 10 பிரித்தானியர்களுக்கு எதிரான 240 பக்க ஆவணத்தை சட்டத்தரணி மைக்கேல் மான்ஸ்ஃபீல்ட் கே.சி இன்று பெருநகர காவல்துறையின் போர்க்குற்றப் பிரிவுக்கு வழங்குவார்.
காஸாவில் பொதுமக்கள் மற்றும் உதவிப் பணியாளர்களைக் குறிவைத்து கொன்றதில் பிரித்தானியர்கள் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது சட்டத்தரணிகள் குழு டெஹ்ரிவிக்கையில், அவர்கள் மருத்துவமனைகள் உட்பட பொதுமக்கள் பகுதிகளில் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியுள்ளனர்.
மட்டுமின்றி, வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் மத தளங்கள் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட தளங்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்கள், மற்றும் பொதுமக்களை கட்டாய இடமாற்றம் மற்றும் இடம்பெயர்வு உள்ளிட்டவைகளிலும் பிரித்தானியர்கள் ஈடுபட்டதாக சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குற்றஞ்சாட்டப்படும் நபர்களில் இஸ்ரேலிய இராணுவத்தில் அதிகாரிகள் மட்டத்தில் பணியாற்றியவர்களும் அடங்குவர். சட்ட காரணங்களுக்காக அவர்களின் பெயர்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
பிரித்தானியாவில் குறிப்பிடத்தக்க வழக்குகளில் பணியாற்றியுள்ள மான்ஸ்ஃபீல்ட், பிரித்தானியாவைச் சேர்ந்த சட்டத்தரணிகள் மற்றும் ஹேக்கில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழுவுடன் இணைந்து தனது அறிக்கையைத் தயாரித்துள்ளார்.
இச்சம்பவமானது அக்டோபர் 2023 முதல் மே 2024 வரை காஸாவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சட்டத்தரணி மான்ஸ்ஃபீல்ட் தெரிவிக்கையில், நமது நாட்டவர்களில் ஒருவர் குற்றம் செய்தால், நாம் அந்த விவகாரம் தொடர்பில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த விவகாரம் தொடர்பில் வெளிநாட்டு அரசாங்கங்கள் மோசமாக நடந்து கொள்வதை நம்மால் தடுக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நம் நாட்டினர் மோசமாக நடந்து கொள்வதையாவது தடுக்க முடியும் என்றார். 10 சந்தேக நபர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஒவ்வொன்றும், அவர்களில் சிலர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள், போர்க்குற்றம் அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்திற்குச் சமமாகும்.
காஸாவில் மருத்துவமனை ஒன்றில் நடந்த கோர சம்பவத்தை நேரில் பார்த்த நபர் தெரிவிக்கையில், தரையில் சிதறிக் கிடந்த சடலங்களைக் கண்டதாகவும், குறிப்பாக மருத்துவமனை முற்றத்தின் நடுவில், அங்கேயே அவர்கள் அனைவரும் கொத்தாக புதைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பேற்க வேண்டும்
பின்னர் புல்டோசர் ஒன்று ஒரு இறந்த உடலின் மீது பாய்ந்து இறந்தவர்களை அவமதித்ததுடன், மருத்துவமனையின் ஒரு பகுதியையும் இடித்தது. அந்த கொடூரமான மற்றும் மனதை உடைக்கும் காட்சியில், இறந்தவர்கள் உடல் முழுவதும் சிதறடிக்கப்பட்டது என்றார்.
இதனிடையே, திரட்டப்பட்ட ஆவணங்கள் கண்டிப்பாக பிரித்தானியப் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் என்பது உண்மை என டௌட்டி ஸ்ட்ரீட் சேம்பர்ஸில் சட்டத்தரணியான சீன் சம்மர்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒவ்வொருவரும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, பதிலளிப்பதை தாம் பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் தாக்குதலில் ஹமாஸ் படைகளால் 400க்கும் குறைவானவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், பழிவாங்கும் நடவடிக்கையாக இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளது.
ஆனால் இதுவரை காஸா தாக்குதலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் அரசியல் தலைவர்களோ அல்லது ராணுவத்தினரோ போர்க்குற்றங்களைச் செய்யவில்லை என்பதை இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது.
கடந்த நவம்பரில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC), இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு குற்றவியல் பொறுப்பேற்க வேண்டும் என்பதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகக் கூறியது.
கடந்த வாரம் காஸாவில் 15 மருத்துவர்கள் மற்றும் மனிதாபிமானப் பணியாளர்கள் பயணித்த ஆம்புலன்ஸ்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து கொல்லப்பட்டது, இஸ்ரேல் இராணுவம் போர்க்குற்றங்களைச் செய்வதாக ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையரை ஒப்புக்கொள்ளத் தூண்டியது.
இது ஒருபுறமிருக்க, பிரித்தானியக் குடிமக்கள் ஒரு வெளிநாட்டு அரசின் ஆயுதப் படைகளில் சேருவது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |