36,000 கடந்த இறப்பு எண்ணிக்கை... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66 பேர்கள்

Palestine Israel-Hamas War Gaza
By Arbin May 27, 2024 08:05 PM GMT
Report

கடந்த 7 மாதங்களாக நீடிக்கும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் போரினால் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 36,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை 36,050 பேர்கள்

குறித்த தகவலை காஸா சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் தாக்குதலுக்கு 66 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒட்டு மொத்தமாக இதுவரை 36,050 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

36,000 கடந்த இறப்பு எண்ணிக்கை... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66 பேர்கள் | Gaza War Death Reaches 36050

அத்துடன் 81,026 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் இஸ்ரேல் எல்லையில் முன்னெடுத்த திடீர் தாக்குதலை அடுத்தே இஸ்ரேல் போர் பிரகடனம் செய்தது.

தொடர்ந்து 7 மாதங்களாக இஸ்ரேல் ஹமாஸ் படைகளை இலக்கு வைத்து பாலஸ்தீன மக்களை கொன்று வருகிறது. இதனிடையே, ரஃபா பகுதி மீது முன்னெடுக்கப்பட்ட இஸ்ரேல் தாக்குதலில் 23 பெண்கள், சிறார்கள், முதியவர்கள் உட்பட 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

உரிய நீதி வேண்டும்... லண்டனில் 43 நாட்கள் தீவிர சிகிச்சையின் பின்னர் மரணமடைந்த நபர்

உரிய நீதி வேண்டும்... லண்டனில் 43 நாட்கள் தீவிர சிகிச்சையின் பின்னர் மரணமடைந்த நபர்

ரஃபா மீதான தாக்குதல் கொடூரமான சம்பவம் என்று முதல் முறையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் சர்வதேச அழுத்தத்தை பொருட்படுத்தாமல் ரஃபா மீதான தாக்குதல் தொடரும் என்றே நெதன்யாகு உறுதிபட தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா கண்டனம்

இதனிடையே ரஃபா மீதான தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட கொடூரம் என்று எகிப்து சாடியுள்ளது.

36,000 கடந்த இறப்பு எண்ணிக்கை... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66 பேர்கள் | Gaza War Death Reaches 36050

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளின் படுகொலைகள் தொடர்வதாக சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து போர் குற்றங்களில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதாக ஜோர்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், துருக்கி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US