காஸா விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு: பெல்ஜிய அமைச்சர் குற்றச்சாட்டு
காஸாவில் இஸ்ரேல் நடத்திய போரில் ஐரோப்பிய ஒன்றியம் செயல்படத் தவறியதால், வெளிவிவகாரக் கொள்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நம்பகத்தன்மை சரிந்து விட்டது என பெல்ஜிய வெளிவிவகார அமைச்சர் மேக்சிம் பிரீவோட் விமர்சித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிராக
இந்த மகத்தான மனிதாபிமான நெருக்கடியில் ஐரோப்பிய ஒன்றியம் இந்த கட்டத்தில் அதன் பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை என்றே பிரீவோட் தெரிவித்துள்ளார்.
இந்த மாத ஐ.நா பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பெல்ஜியம் கூறியுள்ளது, அதே நேரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக புதிய தடைகளையும் விதிக்கிறது.
காஸாவில் நிலவும் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை நடவடிக்கை எடுக்கத் தவறியதால் பெல்ஜியம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
27 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பா ஒன்றியம், காஸா விவகாரத்தில் இதுவரை ஒருமித்த கருத்தை எட்டவில்லை. பொதுமக்களின் பார்வையில், இந்த குறிப்பிட்ட பிரச்சினையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கையின் நம்பகத்தன்மை சரிந்து வருகிறது என்பது தெளிவாகிறது என்றே பிரீவோட் விமர்சித்துள்ளார்.
இரண்டு நிபந்தனை
காஸா போர் காரணமாக இஸ்ரேல் நிறுவனங்களுக்கு நிதியளிப்பதை குறைக்க ஜூலை மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகி முன்மொழிந்தார். ஆனால் இதுவரை அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை.
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்காக பெல்ஜியம் இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. ஹமாஸால் பிடிக்கப்பட்ட மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல், மற்றும் ஹமாஸ் குழுவை பாலஸ்தீன நிர்வாகத்திலிருந்து முழுமையாக விலக்குதல்.
முன்னதாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக ஜூலை மாதம் அறிவித்தார். இதனைஉஅடுத்து ஒரு டசினுக்கும் அதிகமான மேற்கத்திய நாடுகள் வரிசையாக பாலஸ்தீன அரசுக்கு ஆதரவாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |