ட்ரம்பின் அந்த முடிவு... பிரித்தானியா நோக்கி புலம்பெயர் மக்களைப் படையெடுக்க வைக்கும்
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கைப்பறினால் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தோர் படையெடுப்பதை அது தூண்டும் என்று கூறப்படுகிறது.
அரபு நாடுகளில்
இஸ்ரேல் தாக்குதலால் மொத்தமாக சிதைந்துள்ள காஸாவில் இருந்து பாலஸ்தீன மக்கள் மொத்தமாக வெளியேற வேண்டும் என்றும், அப்பகுதியை மத்திய கிழக்கு நாடுகளின் சொர்க்கமாக மாற்றயிருப்பதாக ட்ரம்ப் கூறி வருகிறார்.
இந்த இந்த விசித்திர திட்டத்தால் அரபு நாடுகளுக்கும் இறுதியில் ஐரோப்பாவிற்கும் மில்லியன் கணக்கான மக்கள் குடிபெயரும் வாய்ப்பு உள்ளது என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஐரோப்பாவுக்குச் செல்வதற்கான வாய்ப்பு இல்லாவிட்டால் அரபு நாடுகளில் தஞ்சமடைவதை விட காஸாவில் தங்குவதே சிறந்த முடிவு என உள்ளூர் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மிக மோசமாக
எகிப்தை கடந்து செல்ல பாலஸ்தீன மக்கள் 5000 பவுண்டுகள் வரையில் செலவிடுகின்றனர். ஆனால், எகிப்திய மக்கள் மிக மோசமாக நடந்துகொள்வதால் அங்கே தங்க முடியாத சூழல் என அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு யாரும் ஊழல் நிறைந்த அரபு நாடுகளில் குடியிருக்க விரும்பவில்லை, ஆனால் பெரும்பாலானோர் பிரித்தானியாவில் புதிய வாழ்க்கையை விரும்புவார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |