டோக்கியோ 2020: பிரித்தானியாவுக்கான முதல் பதக்கம் உறுதி!
டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பிரித்தானியா அதன் முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
டேக்வாண்டோ கனரக எடை பிரிவில் போட்டியிட்ட டான்காஸ்டரை (Doncaster) சேர்ந்த பிராட்லி சிண்டன் (Bradly Sinden) கிரேட் பிரிட்டன் அணிக்கான முதல் வெற்றியை பெற்று பிரித்தானியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
2020 ஒலிம்பிக் போட்டியின் இரண்டாம் நாளில், மகுஹாரி மெஸ்ஸி ஹால் ஏவில் நடைபெற்ற டேக்வாண்டோ - ஆண்கள் 68 கிலோ பிரிவில் அரையிறுதிப் போட்டியில், 22 வயதான பிராட்லி சிண்டன், சீன வீரர் ஜாவோ ஷுவாயை (Zhao Shuai) தோற்கடித்தார்.
தற்போதையை நிலையில், பிராட்லி சிண்டனுக்கு குறைந்தபட்சம் ஒரு வெள்ளிப் பதக்கம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஆனால் அவர் இறுதிப் போட்டியில் வென்றால் தங்கப்பதக்கத்தை வெல்லும் வாய்ப்பு உள்ளது.
பிராட்லி சிண்டன், 2019-ஆம் ஆண்டில் மான்செஸ்டரில் உலக பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.