நாய் வளர்ப்பவரா நீங்கள்? இதை செய்யாவிட்டால் ரூ.1000 அபராதம்
நாய் வளர்ப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை கடுமையாக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
நாய் வளர்ப்பு
சமீபகாலமாக சென்னையில் வளர்ப்பு மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தது.
வாகனங்களில் செல்பவர்களை கூட கும்பலாக நாய்கள் துரத்துவதால் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இதனை கட்டுப்படுத்த, சென்னை மாநகராட்சி நாய் வளர்ப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
நாய் வளர்க்க கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நாய்களுக்கு முறையாக ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். நாய்களை வெளியே அழைத்து செல்லும் போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை விதித்தது.
வாய் மூடி கட்டாயம்
ஆனால், நாய் வளர்ப்பவர்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என மாநகராட்சிக்கு பல புகார்கள் வந்துள்ளன.
இந்நிலையில், இந்த விதிகளை கடுமையாக்கும் வகையில், நாய்களை வெளியே செல்லும் போது வாய் மூடி மூடி அணிவிக்காவிட்டால், ரூ.1000 அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழிகாட்டு நெறிமுறையை இந்த அபராதம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |