ஒரே ஓவரில் 5 விக்கெட்கள் - உலக சாதனை படைத்த இந்தோனேசிய வீரர்
இந்தோனேசிய வீரர் கெடே பிரியாண்டனா ஒரே ஓவரில் 5 விக்கெட்கள் உலக சாதனை படைத்துள்ளார்.
கம்போடியா vs இந்தோனேசியா
இந்தோனேசியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள கம்போடியா கிரிக்கெட் அணி, 8 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இன்று நடைபெற்ற 2வது T20 போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற கம்போடியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்தோனேசியா அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்கள் குவித்தது.
168 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கம்போடியா அணி, 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 107 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம், இந்தோனேசியா அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒரே ஓவரில் 5 விக்கெட்கள்
இந்த போட்டியில், இந்தோனேசியா வீரர் கெடே பிரியாண்டனா (Gede Priandana) ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

கம்போடியா அணி, 106 ஓட்டங்களை எடுத்திருந்த போது 15வது ஓவரை வீசிய கெடே பிரியாண்டனா, முதல் 3 பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.
4வது பந்தை டாட் பால் ஆக வீசி விட்டு, 5 மற்றும் 6 வது பந்துகளில் அடுத்தது விக்கெட்களை வீழ்த்தி அணியை ஆல் அவுட் ஆக்கினார்.
இதன் மூலம், சர்வதேச T20 போட்டிகளில் ஒரு ஓவரில் 5 விக்கெட்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை கெடே பிரியாண்டனா படைத்துள்ளார்.
மலிங்கா, ரஷீத் கான் உள்ளிட்டோர் அதிகபட்சமாக ஒரு ஓவரில் 4 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.
2019-20 சையத் முஷ்டாக் அலி டிராபியின் அரையிறுதியில், கர்நாடக அணிக்காக விளையாடிய அபிமன்யு மிதுன், ஹரியானா அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |