பிரபல நடிகர் மரணம்: உலர்ந்த நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி
பிரபல நடிகரான ஜீன் ஹாக்மேன் மற்றும் அவரது மனைவியின் மரணம் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
அதிர்ச்சிக்குக் காரணம், ஜீன் ஹாக்மேன் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் மம்மியாக்கப்பட்ட நிலையில், அதாவது உலர்ந்து சுருங்கிப்போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு அருகில், அவர்களுடைய செல்லப்பிராணியான நாய் ஒன்றும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலர்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள்
அதாவது, ஜீன் ஹாக்மேனும் அவரது மனைவியும் இறந்து பல நாட்கள் ஆகிவிட்டிருக்கின்றன. ஜீன் ஹாக்மேன் இதயத்தில் பேஸ் மேக்கர் என்னும் கருவியைப் பொருத்தியுள்ளார்.
Reuters
உடற்கூறு ஆய்வின்போது அந்தக் கருவியை சோதனை செய்த மருத்துவர்கள், அந்தக் கருவி கடைசியாக கடந்த மாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 17ஆம் திகதி கடைசியாக வேலை செய்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.
ஆம், ஜீன் ஹாக்மேன் பிப்ரவரி 17ஆம் திகதியே உயிரிழந்திருக்கக்கூடும் என்பது அதன் பொருள் ஆகும்.
ஆனால், அவரது மனைவி எப்படி இறந்தார், அவர்களுடைய செல்லப்பிராணி எப்படி இறந்தது என்பது தெரியவில்லை.
அவர்களுக்கு விஷம் ஏதாவது கொடுக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியவேண்டுமானால், அதற்கு பல மாதங்கள் ஆகும்.
ஆக, ஜீன் ஹாக்மேன் மற்றும் அவரது மனைவியின் மரணம் மர்மமாகவே நீடிக்கிறது.
AP