400 ஆண்டுகால பயணம்.,திரும்ப முடியாது! 1000 மனிதர்களை சுமந்து செல்லும் இராட்சத விண்கலம்
பூமியில் இருந்து 4.2 ஒளி ஆண்டுகளில் தொலைவில் அமைந்துள்ள கோளினை நோக்கி செல்ல, இராட்சத விண்கலம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
Chrysalis திட்டம்
பூமி அழிய நேரிட்டால் மனிதர்கள் தப்பிச் செல்ல ஓர் இடம் வேண்டும். அருகில் உள்ள கிரகமான செவ்வாயில்தான் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஞ்ஞானிகள் மற்றொரு சவாலான திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அதுதான் Chrysalis. மனிதர்களை சுமந்து செல்லும் Generation Ship என்ற இரட்சத விண்கலத்தின் மூலம் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.
சுமார் 1000 மனிதர்களை சுமந்து செல்லக்கூடிய இந்த விண்கலத்தின் எடை 2.4 பில்லியன் டன் ஆகும். அப்படியானால் கிட்டத்தட்ட ஒரு நகரத்தையே இது சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
4.2 ஒளி ஆண்டுகள்
எதற்காக இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால் அதுதான் ஆச்சரியமான விடயம் ஆகும். அதாவது Proxima Centauri b என்ற 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கிரகத்தை நோக்கி பயணிக்கத்தான் இந்த விண்கலம்.
இந்த பயணமான வாரங்கள், மாதங்கள் அல்ல; சுமார் 400 ஆண்டுகள் என்பதே ஆச்சரியமும், அதிர்ச்சியும் அளிக்கக்கூடிய தகவல் ஆகும். எனவே இந்த பயணமானது ஒரு முறைதான். பூமிக்கு திரும்ப முடியாது; மறந்துவிட வேண்டியதுதான்.
இதில் பயணிக்கும் மனிதர்கள் அங்கேயே வாழ்ந்து மடிந்து போவார்கள். அவர்களின் பிள்ளைகளும் அப்படியே. அவர்கள் விண்கலத்திலேயே பிறந்து, வளர்ந்து, இறந்துபோவார்கள். 
இந்த விண்கலத்தில் வசிப்பவர்களுக்கு எந்த விதமான உடல்நலக்குறைவும் ஏற்படாமல் இருக்க செயற்கை ஈர்ப்புவிசையை விண்கலமே மெதுவாக சுழலும்போது உருவாக்கும். இதற்கு மையப்பகுதியில் உள்ள சிலிண்டர்கள் வழிவகுக்கும்.
ஜெனரேஷன் விண்கலத்தில் பூமியைப் போல் இயற்கையான சூழலை உருவகப்படுத்தும் பிரம்மாண்டமான இடங்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் உணவு உற்பத்தி, கழிவு மறுசுழற்சி, நீர் சுழற்சி போன்றவையும் இதன் உள்ளேயே நடக்குமாம். அது மட்டுமின்றி ஆண்டு விழாக்கள், விண்மீன்களைப் பார்க்க 'விண்வெளி குவிமாடம்' (130 மீற்றர் உயரம்) இருக்குமாம்.
மனிதர்களும், ரோபோக்களும்
மனிதர்களும், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்கள் இணைந்து வாழ்ந்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வார்கள். அவர்களே நிர்வாகம், கல்வி போன்ற விடயங்களையும் கவனித்துக் கொள்வார்கள். ஆகையால், இது ஒரு விண்வெளி கலாச்சாரமாக இருக்குமாம்.
மற்றொரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால், இந்த பிரம்மாண்ட விண்கலத்தை பூமியில் கட்ட முடியாது. எனவே, பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள நிலையான ஈர்ப்புவிசைப் பகுதியான லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1)யில் இதன் கட்டுமானம் விண்வெளியிலேயே நடைபெறுமாம்.
மனிதர்களை இந்த பயணத்திற்கு தயார் செய்வதுதான் ஆச்சரியமான திட்டம். ஏனெனில், அவர்கள் இதற்காக தயாராக அண்டார்டிகாவில் தனிமைப்படுத்தப்பட்டு வாழ்வார்கள்.
சமூக மற்றும் உளவியல் சவால்களை சமாளிக்க இந்த தனிமை பயிற்சி மிகவும் அவசியம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |