சுவிஸ் மாகாணமொன்றில் திடீரென 100 வீடுகளை காலி செய்ய உத்தரவு: அதிர்ச்சியில் மக்கள்
சுவிஸ் மாகாணமொன்றில், திடீரென 100 அடுக்குமாடிக் குடியிருப்புகளை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் அங்கு வாழ்ந்துவரும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
100 அடுக்குமாடிக் குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவு
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள Boulevard Carl-Vogt என்னுமிடத்தில் அமைந்துள்ள 100க்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் 15 கடைகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி இருப்பதால் அவர்கள் காலி செய்யவேண்டும் என கட்டிட உரிமையாளர்கள் தரப்பில் காரணம் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தங்களை காலி செய்யவைத்துவிட்டு வேறு ஆட்களுக்கு கூடுதல் வாடகையில் கட்டிடங்களை வாடகைக்கு விடுவதற்காகவே கட்டிட உரிமையாளர்கள் இப்படி தங்களை காலி செய்யச் சொல்லியுள்ளதாக கருதுவதால், பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்துவரும் மக்கள் கோபமும் அடைந்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், ஜெனீவா சட்டப்படி அந்த மக்கள் நீதிமன்றம் செல்லலாம். என்றாலும், அவர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்குமா என்பதை உறுதியாகக் கூறமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |