சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலுக்கு எதிரான பிரேரணை: கவலையில் மாகாணமொன்று
சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலுக்கு எதிராக பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் ஜூன் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
ஆனால், அந்த விடயம், சுவிஸ் மாகாணமொன்றிற்கு கவலையை உருவாக்கியுள்ளது.
புலம்பெயர்தலுக்கு எதிரான பிரேரணை
புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி என்னும் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) என்னுமொரு பிரேரணையை முன்வைத்துள்ளது.

அதாவது, புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன்மூலம், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும் என அக்கட்சி கோரி வருகிறது.
புலம்பெயர்ந்தோரால் வீடுகள் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சுவிஸ் மக்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை ஏற்படுவதாகக் கூறி இந்த பிரேரணையை சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ளது.
கவலையில் மாகாணமொன்று
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது என்னும் பிரேரணை, ஜெனீவா மாகாணத்துக்கு கவலையை உருவாக்கியுள்ளது.
அதாவது, ஜெனீவாவிலுள்ள பல நிறுவனங்கள், எல்லை தாண்டி வேலைக்கு வரும் வெளிநாட்டுப் பணியாளர்களை நம்பி உள்ளன.

சுமார் 110,000 பேர் எல்லை தாண்டி ஜெனீவாவுக்கு வருகிறார்கள். ஆக, இந்த பிரேரணை ஒருவேளை அந்த வெளிநாட்டுப் பணியாளர்களை பாதிக்குமோ என்ற கவலை ஜெனீவாவுக்கு உருவாகியுள்ளது.
அப்படி வெளிநாட்டுப் பணியாளர்கள் ஜெனீவாவுக்கு வருவது பாதிக்கப்படுமானால், அது மேலும், பணியாளர் தட்டுப்பாட்டை உருவாக்கும், பல்வேறு பணிகள் பாதிக்கப்படும் என்பதாலேயே ஜெனீவா மாகாண அதிகாரிகள் கவலையடைந்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |