ஓர் ஆணுடன் இருந்தால் மட்டுமே லண்டனில் பாதுகாப்பு! அதனால்தான் வெளியேறினேன்..பிரபல நடிகை
பிரித்தானியாவைச் சேர்ந்த நடிகை ஜெனெவீவ் சென்னெயர், தனது செல்போன் கண்முன்னேயே களவுபோகும்போது சண்டையிட்ட வீடியோவை பகிர்ந்து வைரலாகியுள்ளது.
ஜெனெவீவ் சென்னெயர்
பிரிட்ஜெர்டோன் என்ற பிரபல இணையத் தொடரில் கிளாரா லிவிங்ஸ்டன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஜெனெவீவ் சென்னெயர் (Genevieve Chenneour).
இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி பகீர் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், ஜெனெவீவ் சென்னெயர் ஒரு ஆண்டுக்கு முன்பு, தனது செல்போனை நபர் ஒருவர் திருட முயற்சிக்க, உடனே சுதாரித்துக் கொண்டு அவருடன் சண்டையிடுகிறார். மேலும் ஒருவருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகளையும் காட்டி பேசுகிறார்.
வெளியேற நான் முடிவு செய்தேன்
அவர், "எனது பெயர் ஜெனெவீவ், நான் ஒரு நடிகை. கடந்த ஆண்டு எனது செல்போன் திருடப்பட்டது. 8 ஆண்டுகளாக லண்டன் எனது வீடாக இருந்தது. ஆனால் இந்த நிகழ்விற்கு பிறகு, முற்றிலுமாக நிறைய விடயங்கள் எனக்கு மாறிவிட்டன. இந்த நகரம் பாதுகாப்பற்றதாக நான் உணர்ந்ததால், இதனை விட்டு வெளியேற நான் முடிவு செய்தேன்.
திரும்பியாக வேண்டும் என்று நான் நினைத்தேன்; ஆனால் மறுபடியும் நான் தாக்குதலுக்கு உள்ளானேன். எனவே, எனது திசைகளையும், அன்றாட நடைமுறைகளையும் மாற்றினேன். ஹொட்டல்களில் தங்கினேன். பின்னர் நகரைத்தை விட்டே வெளியேறினேன்.

காபி ஷாப்பில் முதல் நிகழ்வு ஏற்பட்டது. நான் எதற்கும் அப்போது தயாராக இல்லை. நான் குறி வைக்கப்பட்டேன், எனது எதிர்வினைகள் வைரலாகின. ஏனென்றால், நான் திருப்பி அடித்தேன் மற்றும் இரண்டு பெரிய நபர்களுடன் சண்டையிட்டேன். பெரும்பாலான பெண்கள் எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் எடுத்தேன்.
சமூகத்தின் உள்கட்டமைப்பில் சில தீவிரமான மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அப்போதுதான் நம்மால் உண்மையில் விடயங்களை மாற்ற முடியும். இது இனி ஒரு பெண் பொறுப்பேற்பது பற்றிய விடயம் அல்ல.
நான் சில மிகவும் கடினமான உரையாடல்களுக்கும், சில தீவிரமான மாற்றங்களுக்கும், மேலும் கோபமான பெண்களுக்கும் ஆதரவளிக்கிறேன். உண்மையில் இது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
ஏனென்றால் நான் ஒரு ஆணுடன் வாழ்ந்தால் மட்டுமே மீண்டும் லண்டனில் வசிப்பேன் என்று நினைக்கிறேன். அது எவ்வளவு பயங்கரமானது? ஆண்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க, எனக்கு ஒரு ஆண் துணையாகத் தேவைப்படும் நிலை" என தெரிவிக்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |